இந்த ஊடலை வேண்டாமென்கிறேன்
பேரன்பே!எடையற்ற உன் கனம்என் திசைகளை உருகுலைக்கிறதுஎன் உயிர் திவலைகளில்ஊறவைத்த - உன் உலர் கரத்தின்அவ்வொற்றை ஸ்பரிசம்வறண்டு வெடித்துஈ மொய்த்துக் கொண்டிருக்கிறது
தாபதப் பேறே!கைக் கடந்து போவது தான்வாழ்க்கையின் நிச்சயிக்கப்பட்டத் தத்துவமா?திரும்பிப் பார்க்கும் போதெல்லாம்கசையால் அடிப்பது மட்டும் தான்வாழ்க்கை என்பதன் பேரருளா?
என் முதல் பூவே!தேன் குடிக்கும் போதுமுத்தங்கள் மட்டும் விதைத்து விட்டால்நான் தான் ஒரு பட்டாம்பூச்சியா?
அழுந்த என் பாதம் பட்டப் போதுஉயிர் வாடி விழுகிறாய் என்றால்நீ தான் ஒரு பெரும்பூவா?
காலம் சற்று கடுமையாய் ஊதி விட்டக் காற்றில்கரைந்து கலைந்து போவத்தான்நம் காதல் என்பது வேலிப்பருத்தியா?
இல்லை!நானென்பது ஒரு கனக்கும் வண்ணாத்திநீயென்பது ஒரு நந்தவனம்நம் காதல் என்பது விழுது விட்ட பெரும் மரம்!
காயப்படாத காகிதம் தான்கவிதைகளை பிரசவிக்குமா?முலைக்காம்பை கடிக்காத குழந்தையும்கடி வலி பொறுக்காத ஒருத்தாயும்இங்கெங்கேனும் சீவிக்கின்றனரா?
வைராக்கியமே!நாளைய புது நாள்காயங்களுக்கு களிம்பிடும் என்றா நினைக்கிறாய்?அடியேஅது புழுக்களை சேமித்துக் கொண்டிருக்கிறது!
காதலென்பது ஒற்றைவழிப் பாதையா?பரஸ்பர பாதைகள் உருவாக்கப்பட்டுபரஸ்பரம் ஆற்றுப்படுத்துவது தானே அது?
பெருஞ்சேயே!ஊமைகளாகிப் போன நம் கண்கள்கசிக்கின்ற அத்துணை துளிகளும்உப்புக் கரிக்காமல் மண்ணில் விழுவது தான் வலிக்கிறது!
பரிமாற்றிய வார்த்தைகள் என்பதுசுறுக்கிட குத்திய நெருஞ்சி விதைகள் தான்!இன்னும் ஆயிரம் வார்த்தைகள்மயிலிறகாய் நம் பரஸ்பர பாதம் வருடிவிடமுளைக்காமலா போய்விடப்போகின்றது?
சௌபாக்கியமே!கலைந்து அலையும் நீகங்கள்இணைந்து புணர்ந்துமழைகளை தூவத்தான் செய்கிறது!
கரையில் உடையும் அலைகள்மீழ உருவெடுத்துமீண்டும் கரையை முத்தமிடுகின்றது!
பசியால் தவித்துக் கொண்டிருக்கிறேனடிபைத்தியக்காரி!
வா..
கண்ணீர் துடைத்து விடுகிறேன்
உன் சிறுமுலையை வாயில் திணித்து
தாய்ப் பால் பாய்ச்சு!கடிக்காமல் குடிக்கிறேன்!
- ஹஜன் அன்புநாதன் -
Comments
Post a Comment